பூச்சி கட்டுப்பாடு பப்பாளி இலை கரைசல்

http://premagriculture.blogspot.com/2021/04/blog-post.html

பப்பாளி இலை கரைசல்

பப்பாளி இலை பூச்சிக் கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு கிலோ பப்பாளி இலையை சேகரித்து கொள்ள வேண்டும்.

இதனை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து அடுத்த நாள் அதை அரைத்துப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.

ஒரு லிட்டர் கரைசலில் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி கரைசல் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் தேவைப்படும்.

அதற்குத் தகுந்த மாதிரி தயாரித்து 10 லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் கரைசல் கலந்து தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இது பின்வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன.

வேர்முடிச்சிப் புழு

படைப் புழு

நன்றி…

தும்பை இலை கரைசல் | Leucas Aspera

http://premagriculture.blogspot.com/2021/03/leucas-aspera.html

தும்பை இலைக் கரைசல்

தும்பை சாதாரணமாக மழைக் காலத்தில் ஆற்றோரம், வேலியோரம் ஏன்?… தோட்டத்தில் கூட ஏராளமாக முளைத்து வளர்ந்து நிற்கும்.

இலைகள் ஈட்டி போன்று இருக்கும் பூ வெள்ளை நிறத்தில் இருக்கும்.

உடுத்தும் உடை நன்கு வெண்மையாக இருந்தால் தும்பைப் பூ மாதிரி இருக்கிறது என்னும் சொல்வழக்கு கிராமத்தில் உள்ளது.

தும்பையின் தண்டு, இலை, பூக்கள் அனைத்தும் பூச்சி விரட்டியாகப் பயன் தருகிறது.
ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ தும்பை இலை தேவைப்படும்.

இதனைச் சிறிய துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் நல்ல நீரில் ஊற வைக்க வேண்டும் பிறகு இதனை விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 60 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

மறக்காமல் காதி சோப்பை ஒரு லிட்டர் நீருக்கு 4 மில்லி என்ற அளவில் கலந்து மாலை அல்லது காலை நேரத்தில் இலைகள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

இது கீழ் வரும் பூச்சிகளைக் கட்டுப் படுத்துகிறது.

பருத்தியில் சிகப்புப் பூச்சி

பருத்தியில் சிகப்பு பூச்சி பெரிய பிரச்சனை.

இதன் தாய்ப் பூச்சிகளும் குஞ்சுகளும் பருத்தி இலைகளையும், காய்களையும் உண்டு சேதப்படுத்துகின்றன.

இதனால் மகசூல் குறைவதுடன் பருத்தியின் தரமும் குறைந்து நல்ல விலை கிடைப்பதில்லை.

நன்றி…

அசோலா வளர்ப்பு மற்றும் நன்மைகள் | Azolla Cultivation and Benefits

http://premagriculture.blogspot.com/2021/03/azolla-cultivation-and-benefits.html

அசோலா வளர்ப்பு மற்றும் நன்மைகள்

அசோலா என்பது தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும்.

இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடியது.

அசோலா தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.

அசோலா மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை.

தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும் பச்சை அல்லது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.

வேகமாக வளரும் தன்மை கொண்டவை அசோலா வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35 – 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.

சத்துக்கள்

அசோலாவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்புசத்து, கந்தகம், மக்னீசியம், இரும்புசத்துக்கள் உள்ளன.

மேலும் அசோலாவில் புரதச்சத்தும் (25-30 சதவிகிதம்), கொழுப்பு சத்தும் (3-4 சதவீதம்) உள்ளன.

இதில் நார்ப்பொருட்கள் (14- 15 சதவீதம்) குறைவாக உள்ளன.

கால்நடைகளின் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன.

அசோலா தழை சத்தை வழங்க கூடிய சிறந்த மூலமாகும்.

அசோலா உற்பத்தி

நெல் வயல் அல்லது நெல் நாற்றங்கால்.

சிமெண்ட் தொட்டிகள்.

சில்பாலின் சீட் விரிக்கப்பட்ட குழிமுறை.

உரம்

மாட்டுச்சாணம் ஒன்றே அசோலா வளர்ச்சிக்குப் போதுமான உரமாகும்.

மாட்டுச்சாணம் இடுதல்

மகசூல்

விதைத்த மூன்று நாட்களில் அசோலாவின் எடை மூன்று மடங்காக பெருகும்.

15 நாட்களில் பசுந்தீவனம் ஆக பயன்படுத்தப்பட்ட அசோலா தாவரம் தயாராகிவிடும்.அறுவடை

அசோலாவை நாளொன்றுக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அறுவடை செய்யலாம்.

அசோலாவின் நன்மைகள்

உயிர் உரம்

அசோலா மிகச்சிறந்த உயிர் உரம் ஆகும்.

இது ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 கிலோ தழை சத்தை தரக்கூடியது.

காற்றில் இருக்கும் தழைச்சத்தை கிரகிக்கும் திறன் உடையது.

அசோலா நெல் வயலில் தண்ணீரில் மிதந்து காற்று மண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நெற்பயிருக்கு அளிக்கிறது.

அசோலாவை நெல் சாகுபடி வயலில் இட்டு வளர்க்கும் போது 20% மகசூலை அதிகரிக்கச் செய்கிறது.

கால்நடை தீவனம்

கால்நடைகளுக்கு அசோலாவை தீவனமாக அளிப்பதால் அவற்றின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

ஒரு கிலோ புண்ணாக்கு ஒரு கிலோ அசோலாவிற்கு சமமாகும்.

கால்நடைகளுக்கு அசோலாவை உணவாக அளிப்பதன் மூலம் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கிறது.

தீவனச் செலவும் குறைவு.

அசோலாவில் குறைந்த அளவு லிக்னின் உள்ளது.

எனவே கால்நடைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.

அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது.

கோழி தீவனம்

அசோலாவை சாரசரியாக 100 முதல் 300 கிராம் வரை கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

இதனால் கோழிகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடையானது அடர் தீவனம் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.

அசோலாவை உட்கொள்ளும் கோழிகளின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது.

அசோலா கோழிகளுக்கு ஒரு நிலையான தீவனமாகும்.

களைக் கட்டுப்பாடு

அசோலாவானது நெல் வயல்களில் வளரும் களைகளை கட்டுப்படுத்துகிறது.

மேலும் இது மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு தக்க வைத்துக் கொள்கிறது.

நன்றி…

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு | Fish Amino Acid Product

http://premagriculture.blogspot.com/2021/03/fish-amino-acid-product.html

மீன் அமினோ அமிலம்

தேவையான பொருட்கள்

1.மீன் கழிவுகள் – 1/2கிலோ

2.நாட்டு சக்கரை – 1/2கிலோ

3.கொள்கலன்
(வாளி,தொட்டி,பீப்பாய்) – 1

செய்முறை

1. மீன் அமினோ அமிலம் ஒரு இயற்கை இடு பொருளாகும்.

2. இதனை மீன் கழிவுகள் (தலை, வால், குடல்) மற்றும் நாட்டுச்சக்கரை இவ்விரண்டையும் சரிவிகிதத்தில் ஒரு வாளியில் நன்கு கலந்து கொண்டு காற்றுப் புகா வன்னம் 25 – 30 நாட்கள் மூட வேண்டும்.

3. பிறகு அதை நன்கு வடிகட்டி பயன்படுத்தலாம்.

4. இதில் இருந்துவரும் திரவத்தை 30 மி.லி எடுத்து அதை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

5. இது ஒரு சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும்.

நன்றி…

மாடித்தோட்டத்தில் பூசணி வளர்ப்பு | Growing Pumpkin in the Terrace Garden

http://premagriculture.blogspot.com/2021/03/growing-pumpkin-in-terrace-garden.html

பூசணி

வகைகள்

கோ1, கோ2

விதைப்பு காலம்

ஜூன்-ஜூலை டிசம்பர்-ஜனவரி

வளர்ச்சி

3-4மாதம்

வெப்பநிலை

25-30 டிகிரி சென்டிகிரேட்

கொள்கலன் வகைகள்

சிமெண்ட் தொட்டி, மண்தொட்டி, பிளாஸ்டிக் பிப்பாய்கள், மரத்தாலான பீப்பாய்கள், பெட்டிகள், கிரெட்ஸ், தட்டையான கொள்கலன்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், வாளிகள், தகர டப்பாக்கள்.

உபகரணங்கள்

கொத்து, மண்வெட்டி, பூவாளி, கைத்தெளிப்பான், மூங்கில் குச்சிகள், சணல், கயிறு, குழித்தட்டுகள், தொட்டிகள்.

1.விவசாய பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிலையம், தேசிய விதை கழகத்தில் பெறப்பட்ட தரமான விதைகள்.

2.கற்கள், களை விதைகள் நீக்கப்பட்ட நல்ல மண்வகை. ( செம்மண் )

3. நன்கு மக்கிய இயற்கை உரம் மக்கிய தோட்ட கழிவு உரம்.

4.ஆற்று மணல்.

5.செயற்கை உரம் இயற்கை உரம். (மண்புழு உரம் )

6.பூச்சிக் கொல்லிகள். (டை மீத்தோயேட், மாலத்தியான் )

7.பூஞ்சாணக் கொல்லிகள் (கேப்டான், ப்ளூ காப்பர், கார்பன்டசிம்)

8.தாவர கொல்லிகள்
(வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டைச் சாறு)

தயார் செய்தல்

கொள்கலன்னை சுத்தமாக கழுவிய பின்னர் அடிப்பகுதி வடிகாலுக்கான துவாரம் இடவேண்டும்.

மண், மக்கிய உரம், மணல் மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு மண்வெட்டி உதவியால் நன்கு கலக்க வேண்டும்.

கலக்கிய கலவையான மண் கலவையை கொள்கலனில் மிருதுவாக இருக்குமாறு எடுத்துக் கொண்டு மெதுவாக தட்ட வேண்டும்.

தொட்டி விளிம்பிலிருந்து சுமார் ஒரு அங்குலம் அளவு இடைவெளி இருக்க வேண்டும் இந்த இடைவெளி நீர் ஊற்ற வேண்டும்.

மேலும் பொதுவாக விதைகளை விதைக்கும் போது விதையின் அளவு போல் சுமார் இரண்டு மடங்கு ஆழத்திற்கு இருக்குமாறு விதையை ஊன்ற வேண்டும்.

மண் மற்றும் நீர் நிர்வாகம்

தொட்டியில் நல்ல ஆரோக்கியமான விதையை நட வேண்டும்.

தொட்டி ஒன்றுக்கு சுமார் நாலு அல்லது அஞ்சு விதைகளை வளர்க்கலாம்.

தொட்டிகளிலும் கோள்கலன்களிலும் கொடிகளை வளர்க்கும் போது கவனம் தேவை.

கொடிகளுக்கு நீர் ஊற்றும் போது மண்ணில் உள்ள ஈரப்பதம் வேப்பம் கோள்கலன் அளவு கருத்தில் கொண்டு போதுமான அளவு நீர் ஊற்ற வேண்டும்.

கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர் பய்ச்ச வேண்டும்.

அதிக அளவு நீர் அளிப்பது தவறானது.

பொதுவாக மேற்புற மண்ணை ஒரு அங்குலம் அளவு தோண்டி பார்த்து பிறகு ஈரம் இல்லை என்றால் மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும்.

மேற்கண்ட முறையை கடைபிடித்து நீர் பாய்ச்சுதல் அவசியம் ஆகிறது. கொடிகளுக்கு குச்சிகள் கட்ட வேண்டும்.

பந்தல் தயார் செய்தல்

மாடியில் பந்தல் பொடுவது எளிமையான ஒன்றாகும்.

அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும்.

அடியில் சிறு கற்களைகொண்டு மேடை போல் அமைத்து அதன் மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது.

இதில் கயறு அல்லது கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக கட்ட வேண்டும் பந்தலில் கொடியை படற விட வேண்டும்.

உரமிடுதல்

கலப்பு உரங்களை மேலுரமாக இடுவதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும்.

டை அம்மோனியம் பாஸ்பேட், யூரியா, அம்மோனியம் சல்பேட் போன்றவைகளை தொட்டி ஒன்று 5-10 கிராம் யூரியாவை ஈரமான மண்ணில் நட்ட 3 வாரம் நடவு செய்த 2 வாரத்திற்கு பிறகு வாரம் ஒரு முறை 10 நாள்களுக்கு ஒரு முறை அளிக்கவேண்டும்.

அதிக அளவிலான உரமும் கொடிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

உரமிட்ட உடனே நீர் விடவும்.

இயற்கை உரங்களான மண்புழு உரம், மக்கிய தென்னை நார் கழிவு, இலை மக்குகளை கொடிகளுக்கு இடவும்.

செயற்கை உரம்

யூரியா ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஊற்றலாம்.

இயற்கை உரம்

காய்கறி கழிவுகள், முட்டைஒடு, டீத்தூள், தேங்காய் நார் கழிவு, எரு, வேப்பம் புண்ணாக்கு, நொச்சி, எருக்கு.

களை எடுத்தல்

களை எடுப்பதில் கைகலாள் எடுப்பதே மிகவும் சிறந்தது.

ஏனெனில் இதன் மூலம் வேர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கும்.

பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்

கொடிகள் பல வகையான பூச்சி மற்றும் நோய்களினால் தாக்கப்படுகின்றன.

பழ ஈ, வண்டுகள் மற்றும் கம்பளி பூச்சிகள் போன்றவை இவை கொடிகள் நன்கு வளரும் பருவத்தில் தாக்குகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 2ml என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2M வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லியற்ற உற்பத்தி செய்ய 20 நாள்களுக்கு ஒருமுறை வேப்பங்கொட்டை கரைசலை 3M அளவில் தெளிக்கவும்.

வண்டுகள், பழ ஈ, கம்பளி பூச்சி போன்றவை மிக சேதம் விளைவிக்கும் பூச்சியாகும்.

இவற்றால் தாக்கப்பட்ட காய் உபயோகப்படாது.

எனவே பழ ஈ தாக்கிய காய்களை பறித்து அழித்துவிடவும்.

மேலும் கொடிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 1-2 மில்லி என்ற அளவில் மாலத்தியான் பூச்சி மருந்து கலந்து குறைந்தது 2 முறை தெளிக்கவும்.

பூச்சிக்கொல்லி தெளித்த பின்பு இரண்டு வாரத்திற்கு காய்களை அறுவடை செய்து சமைக்கக்கூடாது.

நோய்களில் சாம்பல்நோய் , அடி சாம்பல்நோய் போன்றவை மழைக்காலத்தில் தாக்கும்.

மாடி தோட்டத்தில் வளர்க்கப்படும் கொடிகளை பூஞ்சாண நோய் தாக்குவதைத் தடுக்க கெப்டன் இரண்டு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மண்ணில் நனையும்படி தெளிக்க வேண்டும்.

வைரஸ் நோய்கள் தாக்கப்பட்ட கொடிகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.

செயற்கை பூச்சிக்கொல்லி

பூச்சி கட்டுப்படுத்த மாலத்தியான் 1ml ஒரு லிட்டர் நீரில் கலந்து 15 நாள்களுக்கு பின் தெளிக்கவும். சாம்பல் நோய் , அடி சாம்பல் நோய்கள் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸ குளோரைடு ஒரு கிராம் ஒரு லிட்டர் நீரில் 15 நாள் ஒரு முறை வேர் பாகம் நனையும்படி ஊற்ற வேண்டும்.

இயற்கை பூச்சிக்கொல்லி

முட்டை ஓடு துகள் உப்பு சேர்த்து துவவும்.

செடிகளுக்கு மத்தியில் தக்காளி செடி இடையிடையே வளர்க்கவும்.

தக்காளியை இலை பிழிந்து சாறு எடுத்து கொடிகள் மீது தெளிக்கலாம்.

டீ , காபித்தூள் பாதுகாப்பு கொடுக்கும்.

பஞ்சகாவியம் 5ml என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

வேப்ப எண்ணெய் 5ml என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

பூண்டு ,இஞ்சி, மிளகாய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10g என்ற அளவில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

பூச்சி கண்காணிப்பு

பாலித்தீன் பைகள், மெல்லிய துணி, நாப்தலின் உருண்டை, விளக்குப்பொறி, பசைப் பொறி, வேம்பு, நொச்சி, பஞ்சகாவியம்.

அறுவடை செய்தல்

பழங்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாகவும், தண்டுகளில் இருந்து தண்டுகளை பிரிக்கும் போதும் அறுவடை செய்யலாம்.

நன்கு முதிர்ச்சியடைந்த பழங்கள் விதைத்த 85- 90 நாள்களில் அறுவடை செய்யலாம்.

காய்களை நன்கு முதிர்ந்த பிறகு அறுவடை செய்யும்போது அதில் சத்துக்கள் நிறைந்தும் நல்ல வாசனை சுவை மிகுந்தும் தோற்றத்திற்கு மலர்ச்சியாகவும் இருக்கும்.

பயிர் பாதுகாப்பில் எருக்கு | Calotropis Plant

http://premagriculture.blogspot.com/2021/03/calotropis-plant.html

பயிர் பாதுகாப்பில் எருக்கு

எருக்கு மருத்துவ பயன் மிக்கது இது ஆஸ்க்கிலி பியடேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.

இது வேலி ஓரங்களில் புறம்போக்கு நிலங்களில் நன்கு வளர்ந்து புதர் செடியாக நிற்பதை பார்க்க முடியும்.

அதன் பூவை பொடி செய்த தூள் மருத்துவத்தில் சளிஇருமல் ஆஸ்த்துமாவுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதனை பூச்சி கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்துவதால் நல்ல பயன் கிடைக்கும்.

இதனை தொன்று தொட்டே விவசாயிகள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

நெல் நாற்று நடுவதற்கு முன்பு இந்த செடிகளை சேகரித்து சேற்றில் அழுத்தி நெல் நடும் போது நோயின்றி நல்ல மகசூல் கிடைத்ததாக தெரியவருகிறது.

எருக்கம் இலை, பூ, தண்டு, வேர் பகுதியில் உள்ள கார்டினோ லாய்டு என்னும் வேதிப்பொருள் பூச்சியைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.

எருக்கன் இலை, பூ, தண்டு, வேர் பகுதிகளை தனித்தனியாக பிரித்து நிழலில் உலர்த்த வேண்டும்.

பிறகு இதனை பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பொடியை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து பார்த்தபோது நல்ல பயன் கிடைத்தது.

இது பலவகையான பூச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

நன்றி…

மாடுகளைத் தாக்கும் மடிவீக்க நோய் | Inflammatory Disease Affecting Cows

http://premagriculture.blogspot.com/2021/03/inflammatory-disease-affecting-cows.html

மடிவீக்க நோய்

மடிவீக்க நோய் என்பது அதிக அளவு பால் கறக்கும் மாடுகளைத் தாக்கும் நோய் ஆகும். இந்நோயானது பொதுவாக நுண்ணுயிர்க் கிருமிகளாலும், சில சமயங்களில் பூஞ்சை காரணிகளாலும் ஏற்படுகின்றது. இந்நோய் பால் உற்பத்தியை குறைத்து விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.

உரிய காலத்தில் உடனடியாக மருத்துவம் செய்யப்படாவிட்டால் பால்மடியின் எல்லாப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டு பயனற்றுப் போவதற்கு வாய்ப்புள்ளது. உற்பத்தித்திறன் மிக்க கறவை மாடுகளை இழக்கவும் நேரிடுகிறது. இந்த நோய் பரவுவதற்கு முக்கிய காரணங்கள் பண்ணை சுகாதார பராமரிப்பு குறைவும், பண்ணையாளர்களின் அலட்சியப் போக்கும் ஆகும். கோடை காலங்களில் இன்நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் பால் சிவப்பு நிறமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

நோய் பரவும் முறை

பொதுவாக அசுத்தமான சூழ்நிலைகளில் வளர்க்கப்படும் அதிக பால் கொடுக்கும் மாடுகளை இந்நோய் தாக்குகிறது. பால் மடி மற்றும் காம்புகளில் ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்கள், சிராய்ப்புகள், அசுத்தமான மடி ஆகியவற்றின் மூலமாக நோய்க்கிருமிகள் பால் காம்பின் வழியாக மடியை சென்று அடைகிறது. அசுத்தமான தரை, அகற்றபடாத சாணம், சிறுநீர், அசுத்தமான உபகரணங்கள், சுற்றுச்சூழல், பால் கறவையாளர்களின் அசுத்தமான கைகள், உடைகள் போன்றவற்றின் மூலமாக இந்நோய் ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது. புரதசத்து அதிகமுள்ள புண்ணாக்கு போன்ற தீவனங்களை அதிகளவில் கொடுக்கும் போதும் இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

மடிவீக்க நோய் அறிகுறிகள்

மடி சற்று வீக்கத்துடன் காணப்படும்.

பாதிக்கப்பட்ட மடி சூடாகவும், வலியுடனும் இருக்கும் மடியை தொட்டு பார்ப்பதன் மூலம் இதை அறியலாம் சிலசமயம் காய்ச்சல் கூட ஏற்படலாம்.

மடியில் பால் இறங்காமலும் பால் கறப்பதற்கு விடாமல் உதைத்துக் கொண்டும் இருக்கும்.

நோயுற்ற மடியிலிருந்து கறக்கப்படும் பால் திரிந்தும் சிரிய கட்டிகளுடன் தண்ணீராக நிறம் மாறி காணப்படும்.

அதிகமாக பாதிக்கப்பட்ட மடியில் இருந்து வரும் பால் துர்நாற்றத்துடன் சீல் கலந்த மாதிரி காணப்படும்.

மடி நோய் தடுக்க பராமரிப்பு முறைகள்

பண்ணையும், சுற்றுப்புறமும் தூய்மையான நிலையில் இருக்கவேண்டும்.

மாட்டுக் கொட்டகையை தினம்தோறும் கிருமிநாசினி கொண்டு கழுவி விட வேண்டும். ஈரம் இல்லாமல் இருக்கவேண்டும்.

மாட்டையும், மடியையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். மாடு படுக்கும் இடம் ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும்.

மாட்டு கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் தேங்கி இருக்கக்கூடாது. அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.

பால் கறக்கும் இடமும் பால் கறப்பவர்களின் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறப்பவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்க கூடாது.

பால் கறப்பவர்களின் விரல் நகங்கள் நன்கு வெட்டப்பட்டு இருக்கவேண்டும்.

தரையில் மேடு பள்ளங்களோ, கூர்மையான பொருட்களோ இருக்கக்கடாது. இவை மடியில் சிராய்ப்புகள் ஏற்படுத்தும்.

பால் கறப்பதற்கு முன்பும் பின்பும் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமிநாசினி கொண்டு கழுவி விட்டு பின்னர் உலர்ந்த துணி மூலம் துடைக்க வேண்டும்.

பால் கறக்கும் போது உள்ளங்கை முறையை கையாள வேண்டும். பெருவிரல் முறையில் காம்புகள் அழுத்தப்பட்டு புண்ணாகி விடுவதால் மடி நோய் சுலபமாக தாக்க வழி செய்கின்றது.

பாலின் நிறம் மற்றும் தன்மையில் மாற்றம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

மடியில் சிராய்ப்பு புண் ஏற்படின் உடனடியாக உரிய மருத்துவம் செய்ய வேண்டும்.

மடி நோய் பாதித்த மாடுகளை தனியாக பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும். அதற்கென தனியாக பாத்திரங்கள் இருப்பது நலம். இந்த மாடுகளை கடைசியாக கறக்க வேண்டும்.

நோய் கண்டுள்ள மாடுகளை ஆரம்ப நிலையிலேயே அறிந்தால் சிகிச்சை எளிது.

நோய் தாக்கப்பட்ட மாடுகளின் பாலை பரிசோதனை செய்து காரணிகளை கண்டுபிடித்து அதன் பின் சிகிச்சை செய்தால் நல்ல பயன் அளிக்கும்.

மடி நோய் தாக்கப்பட்ட பாலை கன்றுகளோ அல்லது மனிதர்களோ அருந்தக்கூடாது.

பால் கறவை வற்றும் கடைசி காலத்தில் தகுந்த தடுப்பு சிகிச்சை அளித்தால் பிற்காலத்தில் இந்த நோய் தாக்குதல் அதிகம் இருக்காது.

அதிகம் பால் கறக்கும் கலப்பினப் பசுக்களில் மடிவீக்கநோயால் பாதிப்படைகின்றன. குறிப்பாக ஜேல்ஸ்டியன் , பிரசியன் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால் இவ்வகை மாடுகளை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும்.

பால் கறந்த பிறகு ஒரு மணி நேரம் மாடுகள் படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். (சமயங்களில் தீவனம் சாப்பிடக் கொடுத்தால் படுக்காமல் இருக்கும்)

அடிக்கடி மடிவீக்க நோயினால் பாதிக்கப்படும் மற்றும் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையிலிருந்து அகற்றி விட வேண்டும்.

சிகிச்சை

மடிவீக்க நோய் பாதிக்கப்பட்டால் காலம் தாழ்த்தாது சிகிச்சை அளிக்க வேண்டும்.

பாலை பரிசோதித்த காரணிகளை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை மருத்துவர் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும்.

சுயமாகப் சிகிச்சை அளிக்க கூடாது.

நன்றி…

மாடி தோட்டத்தில் பீட்ரூட் வளர்ப்பு | Growing Beetroot in the Terrace Garden

http://premagriculture.blogspot.com/2021/03/growing-beetroot-in-terrace-garden.html

பீட்ரூட்

வகைகள்

ஊட்டி 1, டெட்ராய்ட் அடர் சிவப்பு, சிவப்பு பந்து

விதைப்பு காலம்

ஜூலை – ஆகஸ்ட்

வளர்ச்சி

3-4மாதம்

வெப்பநிலை

25-30 டிகிரி சென்டிகிரேட்

கொள்கலன் வகைகள்

சிமெண்ட் தொட்டி, மண்தொட்டி, பிளாஸ்டிக் பிப்பாய்கள், மரத்தாலான பீப்பாய்கள், பெட்டிகள், கிரெட்ஸ், தட்டையான கொள்கலன்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், வாளிகள், தகர டப்பாக்கள்.

உபகரணங்கள்

கொத்து, மண்வெட்டி, பூவாளி, கைத்தெளிப்பான், மூங்கில் குச்சிகள், சணல், கயிறு, குழித்தட்டுகள், தொட்டிகள்.

1.விவசாய பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிலையம், தேசிய விதை கழகத்தில் பெறப்பட்ட தரமான விதைகள்.

2.கற்கள், களை விதைகள் நீக்கப்பட்ட நல்ல மண்வகை. ( செம்மண் )

3. நன்கு மக்கிய இயற்கை உரம் மக்கிய தோட்ட கழிவு உரம்.

4.ஆற்று மணல்.

5.செயற்கை உரம் இயற்கை உரம். (மண்புழு உரம் )

6.பூச்சிக் கொல்லிகள். (டை மீத்தோயேட், மாலத்தியான் )

7.பூஞ்சாணக் கொல்லிகள் (கேப்டான், ப்ளூ காப்பர், கார்பன்டசிம்)

8.தாவர கொல்லிகள்
(வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டைச் சாறு)

தயார் செய்தல்

கொள்கலன்னை சுத்தமாக கழுவிய பின்னர் அடிப்பகுதி வடிகாலுக்கான துவாரம் இடவேண்டும்.

மண், மக்கிய உரம், மணல் மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு மண்வெட்டி உதவியால் நன்கு கலக்க வேண்டும்.

கலக்கிய கலவையான மண் கலவையை கொள்கலனில் மிருதுவாக இருக்குமாறு எடுத்துக் கொண்டு மெதுவாக தட்ட வேண்டும்.

தொட்டி விளிம்பிலிருந்து சுமார் ஒரு அங்குலம் அளவு இடைவெளி இருக்க வேண்டும் இந்த இடைவெளி நீர் ஊற்ற வேண்டும்.

மேலும் பொதுவாக விதைகளை விதைக்கும் போது விதையின் அளவு போல் சுமார் இரண்டு மடங்கு ஆழத்திற்கு இருக்குமாறு விதையை ஊன்ற வேண்டும்.

மண் மற்றும் நீர் நிர்வாகம்

தொட்டியில் நல்ல ஆரோக்கியமான விதையை நட வேண்டும்.

தொட்டி ஒன்றுக்கு சுமார் நாலு அல்லது அஞ்சு விதைகளை வளர்க்கலாம்.

தொட்டிகளிலும் கோள்கலன்களிலும் செடிகளை வளர்க்கும் போது கவனம் தேவை.

செடிகளுக்கு நீர் ஊற்றும் போது மண்ணில் உள்ள ஈரப்பதம், வேப்பம், கோள்கலன் அளவு கருத்தில் கொண்டு போதுமான அளவு நீர் ஊற்ற வேண்டும்.

கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர் பய்ச்ச வேண்டும்.

அதிக அளவு நீர் அளிப்பது தவறானது.

பொதுவாக மேற்புற மண்ணை ஒரு அங்குலம் அளவு தோண்டி பார்த்து பிறகு ஈரம் இல்லை என்றால் மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும்.

மேற்கண்ட முறையை கடைபிடித்து நீர் பாய்ச்சுதல் அவசியம் ஆகிறது.

உரமிடுதல்

கலப்பு உரங்களை மேலுரமாக இடுவதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும்.

டை அம்மோனியம் பாஸ்பேட், யூரியா, அல்லது அம்மோனியம் சல்பேட் போன்றவைகளை தொட்டி ஒன்று 5-10 கிராம் யூரியாவை ஈரமான மண்ணில் நட்ட 3 வாரம் அல்லது நடவு செய்த 2 வாரத்திற்கு பிறகு வாரம் ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை அளிக்கவேண்டும்.

அதிக அளவிலான உரமும் செடிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

உரமிட்ட உடனே நீர் விடவும்.

இயற்கை உரங்களான மண்புழு உரம், மக்கிய தென்னை நார் கழிவு, இலை மக்குகளை செடிகளுக்கு இடவும்.

செயற்கை உரம்

யூரியா ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஊற்றலாம்.

இயற்கை உரம்

காய்கறி கழிவுகள், முட்டைஒடு, டீத்தூள், தேங்காய் நார் கழிவு, எரு, வேப்பம் புண்ணாக்கு, நொச்சி, எருக்கு.

களை எடுத்தல்

களை எடுப்பதில் கைகலாள் எடுப்பதே மிகவும் சிறந்தது.

ஏனெனில் இதன் மூலம் வேர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கும்.

பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்

காய்கறி செடிகள் பல வகையான பூச்சி மற்றும் நோய்களினால் தாக்கப்படுகின்றன.

வண்டுகள் மற்றும் இலை சுருட்டு புழு போன்றவை முக்கியமான வகையே சார்ந்தவை.

இவை செடிகள் நன்கு வளரும் பருவத்தில் தாக்குகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 2ml என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2M வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லியற்ற காய்கறிகள் உற்பத்தி செய்ய 20 நாள்களுக்கு ஒருமுறை வேப்பங்கொட்டை கரைசலை 3M அளவில் தெளிக்கவும்.

வண்டுகள் மற்றும் இலை சுருட்டு புழு போன்றவை மிக சேதம் விளைவிக்கும் பூச்சியாகும்.

இவற்றால் தாக்கப்பட்ட காய்கறிகள் உபயோகப்படாது.

எனவே பூச்சி தாக்கிய காய்கறிகளை பறித்து அழித்துவிடவும்.

மேலும் செடிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 1-2 மில்லி என்ற அளவில் மாலத்தியான் பூச்சி மருந்து கலந்து குறைந்தது 2 முறை தெளிக்கவும்.

பூச்சிக்கொல்லி தெளித்த பின்பு இரண்டு வாரத்திற்கு காய்கறிகளை அறுவடை செய்து சமைக்கக்கூடாது.

இலை புள்ளி மற்றும் வேர் அழுகல் நோய்கள் போன்றவை மழைக்காலத்தில் தாக்கும்.

மாடி தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளை பூஞ்சாண நோய் தாக்குவதைத் தடுக்க கெப்டன் இரண்டு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மண்ணில் நனையும்படி தெளிக்க வேண்டும்.

வைரஸ் நோய்கள் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.

செயற்கை பூச்சிக்கொல்லி

பூச்சி கட்டுப்படுத்த மாலத்தியான் 1ml ஒரு லிட்டர் நீரில் கலந்து 15 நாள்களுக்கு பின் தெளிக்கவும்.

வேர் அழுகல் நோய், இலை புள்ளி கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸ குளோரைடு ஒரு கிராம் ஒரு லிட்டர் நீரில் 15 நாள் ஒரு முறை வேர் பாகம் நனையும்படி ஊற்ற வேண்டும்.

இயற்கை பூச்சிக்கொல்லி

முட்டை ஓடு துகள் உப்பு சேர்த்து துவவும்.

செடிகளுக்கு மத்தியில் தக்காளி செடி இடையிடையே வளர்க்கவும்.

தக்காளியை இலை பிழிந்து சாறு எடுத்து செடிகள் மீது தெளிக்கலாம்.

டீ , காபித்தூள் பாதுகாப்பு கொடுக்கும்.

பஞ்சகாவியம் 5ml என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

வேப்ப எண்ணெய் 5ml என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

பூண்டு ,இஞ்சி, மிளகாய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10g என்ற அளவில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

பூச்சி கண்காணிப்பு

பாலித்தீன் பைகள், மெல்லிய துணி, நாப்தலின் உருண்டை, விளக்குப்பொறி, பசைப் பொறி, வேம்பு, நொச்சி, பஞ்சகாவியம்.

அறுவடை செய்தல்

அக்டோபர் – டிசம்பர்.

90-100 நாட்கள்.

விதைத்த 60 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்கு தயாராகி விடும்.

கிழங்குகளில் வட்டமான வெண்மை நிறக் கோடுகள் முழுவதும் பரவுவதற்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும்.

ஓரளவு இள நிலையில் இருக்கும்போது அறுவடை செய்ய வேண்டும்.

இல்லையேல் நார்த் தன்மை உடையதாக மாறிவிடும்.

காய்கறிகளை நன்கு முதிர்ந்த பிறகு அறுவடை செய்யும்போது அதில் சத்துக்கள் நிறைந்தும் நல்ல வாசனை சுவை மிகுந்தும் தோற்றத்திற்கு மலர்ச்சியாகவும் இருக்கும்.

பஞ்சகவ்யா தயாரிப்பு | Panchagavya

http://premagriculture.blogspot.com/2021/03/panchakavya-product.html

பஞ்ச கவ்யம்

நமது முன்னோர்கள் முனிவர்கள் நமக்கு அளித்த மாமருந்து பஞ்ச கவ்யம் ஆகும். குறிப்பாக சிவராத்திரி அன்று சிவாலயங்களில் நீத்தார் நினைவு நாள் சடங்குகளுக்கு பிறகு வழங்கப்படும் பிரசாதம் பஞ்ச கவ்யம் ஆகும். இது உடலைத் தூய்மைப்படுத்தி உள்ளத்தை செம்மைப்படுத்தி நோய் நீக்கி நம்மை வாழவைக்கிறது. தற்போது கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகளிடையே பஞ்ச கவ்யம் என்னும் இயற்கை தெளிப்பு கரைசல் பிரபலமடைந்து வருகின்றது. விவசாயிகள் பலரும் குறிப்பாக ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் பஞ்ச கவ்யம் என்ற இயற்கை தெளிப்பு உரக் கரைசலை எல்லா தானியப் பயிர்களுக்கும்், பூச்் செடிகளுக்கும், பழ மரங்களுக்கும் தெளித்து பயன் பெற்று வருகின்றனர். இந்த பஞ்ச கவ்யம் இரண்டு முறைகளில் தயாரிக்கலாம்.

பஞ்ச கவ்யம் தயாரிப்பு முறைகள்

புதிய பசு மாட்டு சாணம் 7 கிலோ, பசு மாட்டு சிறுநீர் 7 லிட்டர், இத்துடன் தண்ணீர் 10 லிட்டர் இவைகளை சிமெண்ட் தொட்டி, பானை, பிளாஸ்டிக் கேன், தாழி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இட்டு நன்கு கலந்து 21 நாட்கள் ஊற வைக்கவேண்டும். இரும்பு மற்றும் அலுமினிய கோள்கலன்களை பயன்படுத்தக்கூடாது. தினசரி 2-4 முறை நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலக்குவதால் நொதித்தலினால் உருவாகும் வாயு வெளியேற உதவும். 22ஆம் நாள் இத்துடன் பசு மாட்டு பால் 2 லிட்டர், நன்கு புளித்த பசு மாட்டு தயிர் 2 லிட்டர், பசு மாட்டு நெய் 3 லிட்டர், கரும்புச்சாறு 3 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 12 எண்கள், பனை அல்லது தென்னை பதனீர் 2 லிட்டர் (வாய்ப்பு இருப்பின்) ஆகியவைகளை நன்கு கலந்து சேர்க்க வேண்டும். கரும்பு சாறு கிடைக்காத போது 3 லிட்டர் நீரில் 1/2 கிலோ நாட்டு சர்க்கரையை கரைத்து பயன்படுத்த வேண்டும். அனைத்தையும் சேர்த்து மேலும் 7 நாட்கள் முன்பு போலவே தினமும் 2-4 முறை கலக்க வேண்டும். தற்போது பேரூட்ட சத்துக்கள், நுண்ணூட்ட சத்துக்கள், நுண்ணுயிர்கள் வளர்ச்சி ஊக்கிகள் பெருகி சத்து மிகுந்த இயற்கை உயிர் உரமான பஞ்ச கவ்யம் கரைசல் தயார்.

இரண்டாவது முறை

இயற்கை எரிவாயு கலன் உள்ள விவசாயிகள் இந்த முறையில் பஞ்ச கவ்யம் தயாரிக்கலாம். இயற்கை எரிவாயு கலனின் பசுமாட்டின் சாணத்தை பயன்படுத்த வேண்டும்.

எரிவாயு கலன் மூலம் வெளியாகும் பசு மாட்டு சாணத்தை 5 கிலோ எடுத்துக் கொண்டு அதில் பசு மாட்டு சிறுநீர் 3 லிட்டர் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் பசு மாட்டு பால் 2லிட்டர், நன்கு புளித்த பசு மாட்டு தயிர் 2 லிட்டர், பசுமாட்டு நெய் 3லிட்டர், கரும்புச் சாறு 3 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 12 எண்கள், பனை அல்லது தென்னை பதனீர் (கள்ளு) 2 லிட்டர் ஆகியவற்றை சிமெண்ட் தொட்டி அல்லது மண்பானை அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு நன்றாக கலந்து நீளலான இடத்தில் மூடாமல் வைக்க வேண்டும். தினமும் 2-4 முறை நன்கு கலக்கி விட வேண்டும். இதனால் மேற்கண்ட இயற்கை உயிர் உரக் கரைசலுக்கு அதிக காற்றோட்டம் கிடைக்கும். நுண்ணுயிர்கள் அபரிதமாக பெருகும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால் பயன்படுத்தத்தக்க சிறந்த பஞ்ச கவ்யம் தயார்.

இதனை இவ்வாறு தினமும் கலக்கிக்கொண்டு இருந்தால் இரண்டு மாதம் வரையில் கெடாமல் பாதுகாத்து பயன்படுத்தலாம்.

நாட்கள் அதிகமாக அதிகமாக பஞ்ச காவ்யத்தின் பலம் கூடும். கெட்டியாக மாறினால் போதிய அளவு நீர் விட்டு மீண்டும் கலக்கி வர வேணடும்.

பஞ்ச கவ்யத்தில் உள்ள மூலப் பொருட்களின் பயன்கள்

பசுமாட்டு சாணம் = பாக்டீரியா, பூஞ்சானம், நுண்ணுயிர் சத்துக்கள்.

பசுமாட்டு சிறுநீர் = பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைசத்து.

பால் = புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள், அமினோ அமிலங்கள், கால்சியம் மற்றும் நைட்ரஜன் சத்துக்கள்.

தயிர் = லேக்டோ பேசில்லஸ் ஜீரணிக்கத்தக்க செரிமானத்தன்மை தரவல்ல நுண்ணுயிர்.

நெய் = வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கால்சியம் மற்றும் கொழுப்பு சத்து.

இளநீர் = சைட்டோகைனின் என்னும் வளர்ச்சி ஊக்கி மற்றும் அனைத்து வகை தாதுக்கள்.

கரும்பு சாறு = இனிப்பு (குளுக்கோஸ்) வழங்கி நுண்ணுயிர் வளர்ச்சியை அதிகரிக்கும்.

வாழைப்பழம் மற்றும் பதநீர் = மினரல் ஆகவும், நொதிப்பு நிலை அதிகப்படுத்தவும், நுண்ணூட்டச்சத்து அதிகப்படுத்தவும்.

பயிர்களுக்குப் பயன்படுத்தும் முறை

முறையாகத் தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்யம் 300 மில்லியே 10 லிட்டர் நீரில் கலந்து விசைத் தெளிப்பான் அல்லது கைத்தெளிப்பான் அல்லது நொச்சி இலை, வேப்பிலை கொண்டு இலை வழியாக காலை அல்லது மாலை நேரங்களில் எல்லா பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

இந்த கரைசல் தெளிப்பானில் ஊற்றி பயன்படுத்தும்போது கைத்தெளிப்பான் எனில் வடிகட்டியும் விசைத் தெளிப்பான் எனில் வால்வு மற்றும் குழாயின் நுனிப்பகுதியை பெரிதாக்கிக் கொண்டும் பயன்படுத்தினால் நல்ல முறையில் தெளிக்க முடியும்.

பலன்கள்

பஞ்ச கவ்யத்தில் தழை, மணி, சாம்பல் சத்துக்கலும், நுண்ணூட்ட சத்துக்களும், நுண்ணுயிர் சத்துக்களும், பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவதால் விதை முளைப்புத் திறனை அதிகரிக்கவும், வேர் வளர்ச்சியை அதிகரிக்கவும், பயிர்கள் செழிப்பாக வளரவும், மகசூல் அதிகரிக்கவும், விளைபொருட்களின் சுவை, மணம், எடை கூடவும், கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உடல் நலம் பேணவும், மனிதர்களுக்கு ஏற்படும் சில நோய்கள் நீங்கவும், பயன்படுத்துவதாக தெரிய வருகிறது. நெல் பயிருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் 2-3 முறை தெளித்தால் அரிசி மோட்டாவாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

நன்றி…

மாடித்தோட்டத்தில் கொத்தவரங்காய் வளர்ப்பு | Growing Cluster Bean in the Terrace Garden

http://premagriculture.blogspot.com/2021/03/growing-cluster-bean-in-terrace-garden.html

கொத்தவரங்காய்

வகைகள்

பூசா மவுசாமி, பூசா நவுபகார்

விதைப்பு காலம்

ஜூன் – ஜூலை, அக்டோபர் – நவம்பர்

வளர்ச்சி

3-4 மாதம்

வெப்பநிலை

25-30 டிகிரி சென்டிகிரேட்

கொள்கலன் வகைகள்

சிமெண்ட் தொட்டி, மண்தொட்டி, பிளாஸ்டிக் பிப்பாய்கள், மரத்தாலான பீப்பாய்கள், பெட்டிகள், கிரெட்ஸ், தட்டையான கொள்கலன்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், வாளிகள், தகர டப்பாக்கள்.

உபகரணங்கள்

கொத்து, மண்வெட்டி, பூவாளி, கைத்தெளிப்பான், மூங்கில் குச்சிகள், சணல், கயிறு, குழித்தட்டுகள், தொட்டிகள்.

1.விவசாய பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிலையம், தேசிய விதை கழகத்தில் பெறப்பட்ட தரமான விதைகள்.

2.கற்கள், களை விதைகள் நீக்கப்பட்ட நல்ல மண்வகை. ( செம்மண் )

3. நன்கு மக்கிய இயற்கை உரம் மக்கிய தோட்ட கழிவு உரம்.

4.ஆற்று மணல்.

5.செயற்கை உரம் இயற்கை உரம். (மண்புழு உரம் )

6.பூச்சிக் கொல்லிகள். (டை மீத்தோயேட், மாலத்தியான் )

7.பூஞ்சாணக் கொல்லிகள் (கேப்டான், ப்ளூ காப்பர், கார்பன்டசிம்)

8.தாவர கொல்லிகள்
(வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டைச் சாறு)

தயார் செய்தல்

கொள்கலன்னை சுத்தமாக கழுவிய பின்னர் அடிப்பகுதி வடிகாலுக்கான துவாரம் இடவேண்டும்.

மண், மக்கிய உரம், மணல் மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு மண்வெட்டி உதவியால் நன்கு கலக்க வேண்டும்.

கலக்கிய கலவையான மண் கலவையை கொள்கலனில் மிருதுவாக இருக்குமாறு எடுத்துக் கொண்டு மெதுவாக தட்ட வேண்டும்.

தொட்டி விளிம்பிலிருந்து சுமார் ஒரு அங்குலம் அளவு இடைவெளி இருக்க வேண்டும் இந்த இடைவெளி நீர் ஊற்ற வேண்டும்.

மேலும் பொதுவாக விதைகளை விதைக்கும் போது விதையின் அளவு போல் சுமார் இரண்டு மடங்கு ஆழத்திற்கு இருக்குமாறு விதையை ஊன்ற வேண்டும்.

மண் மற்றும் நீர் நிர்வாகம்

தொட்டியில் நல்ல ஆரோக்கியமான விதையை நட வேண்டும்.

தொட்டி ஒன்றுக்கு சுமார் நாலு அல்லது அஞ்சு விதைகளை வளர்க்கலாம்.

தொட்டிகளிலும் கோள்கலன்களிலும் செடிகளை வளர்க்கும் போது கவனம் தேவை.

செடிகளுக்கு நீர் ஊற்றும் போது மண்ணில் உள்ள ஈரப்பதம் வேப்பம் கோள்கலன் அளவு கருத்தில் கொண்டு போதுமான அளவு நீர் ஊற்ற வேண்டும்.

கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர் பய்ச்ச வேண்டும்.

அதிக அளவு நீர் அளிப்பது தவறானது.

பொதுவாக மேற்புற மண்ணை ஒரு அங்குலம் அளவு தோண்டி பார்த்து பிறகு ஈரம் இல்லை என்றால் மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும்.

மேற்கண்ட முறையை கடைபிடித்து நீர் பாய்ச்சுதல் அவசியம் ஆகிறது.

உரமிடுதல்

கலப்பு உரங்களை மேலுரமாக இடுவதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும்.

டை அம்மோனியம் பாஸ்பேட், யூரியா, அல்லது அம்மோனியம் சல்பேட் போன்றவைகளை தொட்டி ஒன்று 5-10 கிராம் யூரியாவை ஈரமான மண்ணில் நட்ட 3 வாரம் அல்லது நடவு செய்த 2 வாரத்திற்கு பிறகு வாரம் ஒரு முறை அல்லது 10 நாள்களுக்கு ஒரு முறை அளிக்கவேண்டும்.

அதிக அளவிலான உரமும் செடிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

உரமிட்ட உடனே நீர் விடவும்.

இயற்கை உரங்களான மண்புழு உரம், மக்கிய தென்னை நார் கழிவு, இலை மக்குகளை செடிகளுக்கு இடவும்.

செயற்கை உரம்

யூரியா ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஊற்றலாம்.

இயற்கை உரம்

காய்கறி கழிவுகள், முட்டைஒடு, டீத்தூள், தேங்காய் நார் கழிவு, எரு, வேப்பம் புண்ணாக்கு, நொச்சி, எருக்கு.

களை எடுத்தல்

களை எடுப்பதில் கைகலாள் எடுப்பதே மிகவும் சிறந்தது.

ஏனெனில் இதன் மூலம் வேர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கும்.

பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்

காய்கறி செடிகள் பல வகையான பூச்சி மற்றும் நோய்களினால் தாக்கப்படுகின்றன.

காய் புழு மற்றும் தத்துப்பூச்சி போன்றவை சாறு உறிஞ்சும் வகையே சார்ந்தவை.

இவை செடிகள் நன்கு வளரும் பருவத்தில் தாக்குகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 2ml என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2M வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லியற்ற காய்கறிகள் உற்பத்தி செய்ய 20 நாள்களுக்கு ஒருமுறை வேப்பங்கொட்டை கரைசலை 3M அளவில் தெளிக்கவும்.

காய் புழு மற்றும் தத்து பூச்சி போன்றவை மிக சேதம் விளைவிக்கும் பூச்சியாகும்.

இவற்றால் தாக்கப்பட்ட காய்கறிகள் உபயோகப்படாது.

எனவே காய் புழு மற்றும் தத்து பூச்சி தாக்கிய காய்கறிகளை பறித்து அழித்துவிடவும்.

மேலும் செடிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 1-2 மில்லி என்ற அளவில் மாலத்தியான் பூச்சி மருந்து கலந்து குறைந்தது 2 முறை தெளிக்கவும்.

பூச்சிக்கொல்லி தெளித்த பின்பு இரண்டு வாரத்திற்கு காய்கறிகளை அறுவடை செய்து சமைக்கக்கூடாது.

நோய்களில் இலை புள்ளி மற்றும் சாம்பல் நோய் தாக்கும்.

மாடி தோட்டத்தில் வளர்க்கப்படும் செடி களை பூஞ்சாண நோய் தாக்குவதைத் தடுக்க கெப்டன் இரண்டு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மண்ணில் நனையும்படி தெளிக்க வேண்டும்.

வைரஸ் நோய்கள் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்.

செயற்கை பூச்சிக்கொல்லி

பூச்சி கட்டுப்படுத்த மாலத்தியான் 1ml ஒரு லிட்டர் நீரில் கலந்து 15 நாள்களுக்கு பின் தெளிக்கவும்.

இலை புள்ளி மற்றும் சாம்பல் நோய்கள் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸ குளோரைடு ஒரு கிராம் ஒரு லிட்டர் நீரில் 15 நாள் ஒரு முறை வேர் பாகம் நனையும்படி ஊற்ற வேண்டும்.

இயற்கை பூச்சிக்கொல்லி

முட்டை ஓடு துகள் உப்பு சேர்த்து துவவும்.

செடிகளுக்கு மத்தியில் தக்காளி செடி இடையிடையே வளர்க்கவும்.

தக்காளியை இலை பிழிந்து சாறு எடுத்து செடிகள் மீது தெளிக்கலாம்.

டீ , காபித்தூள் பாதுகாப்பு கொடுக்கும்.

பஞ்சகாவியம் 5ml என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

வேப்ப எண்ணெய் 5ml என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

பூண்டு ,இஞ்சி, மிளகாய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10g என்ற அளவில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

பூச்சி கண்காணிப்பு

பாலித்தீன் பைகள், மெல்லிய துணி, நாப்தலின் உருண்டை, விளக்குப்பொறி, பசைப் பொறி, வேம்பு, நொச்சி, பஞ்சகாவியம்.

அறுவடை செய்தல்

விதைத்த 90வது நாளில் அறுவடை செய்யலாம்.

ஜூலை- ஆகஸ்ட்

30-35 நாள்கள்

இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

காய்கறிகளை நன்கு முதிர்ந்த பிறகு அறுவடை செய்யும்போது அதில் சத்துக்கள் நிறைந்தும் நல்ல வாசனை சுவை மிகுந்தும் தோற்றத்திற்கு மலர்ச்சியாகவும் இருக்கும்.